தஞ்சாவூர் டிச 31 தஞ்சை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்படுகிறது மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கோவிந்தராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லண்டனிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வந்த மூன்று பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர்களின் ரத்த மாதிரிகள் மேல் பரிசோதனைக்காக  புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இவர்களில் ஒருவரின் தொடர்பில் இருந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் தகுந்த சமூக பாதுகாப்பு இடைவெளியுடன் முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் தஞ்சை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தங்கும் விடுதிகள் ஓட்டல்கள் கேளிக்கை விடுதிகள் மற்றும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி அனுமதி இல்லை இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேற்கண்டவாறு மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்