வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்குச் சுழற்சிக் காரணமாக தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணன், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மய்யம் தெரிவித்துள்ளது.

மற்ற கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.