தஞ்சை நகர் பகுதியில் இயங்கி வரும் மேம்பாலம் அரசு மேநிலைப்பள்ளி 1980களின் வாக்கில் உயர்நிலைப்பள்ளியாகத் தொடங்கி நகரின் மய்யத்தில் சிறப்பாகச் செயல்படும் அரசுப் பள்ளியாகும்.

அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசின் சலுகைகளாக புத்தகம், சீருடை மற்றும் பல உதவிகள் வழங்குவது வழக்கம், இந்த ஆண்டும் வழக்கம் போல் தஞ்சை மேம்பாலம்அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் சீருடைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் வழங்கி மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார்.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்