தஞ்சாவூர் டிச :30, தஞ்சை ஆட்சியர் மாவட்ட அலுவலககூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் – 1 ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலமாக வருகிற 3-ம் தேதி காலை 10 மணி முதல், மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறுகிறது, இதற்காக 21 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது, போட்டித் தேர்வு எழுத வரும் அனைவரையும் அனைத்து மையங்களிலும் தெர்மல் ஸ்கேனர், மற்றும் பல்சு ஆக்சி மீட்டர், கொண்டு பரிசோதனை செய்த பிறகே தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தேர்வு மையங்களிலும் கிருமி நாசினி தெளித்து விடவும் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரித்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் தேர்வு மையங்கள் அருகிலேயே மருத்துவக் குழுக்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும் இருந்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு நாளன்று தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு சென்றிட கூடுதல் பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்போன் மற்றும் மின்னணு தொடர்பான பொருட்கள் கொண்டு செல்ல கண்டிப்பாக அனுமதி கிடையாது, தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள் குழுவினர்கள் ஆய்வு மற்றும் போலீசாரை ஒருங்கிணைத்து தேர்வு மையங்களை கண்காணிக்கும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வர்கள் அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும்எஎவ்வித பயமின்றியும் பாதுகாப்பாகவும் தேர்வு எழுத வேண்டும் என்று ஆட்சியர் கூறினார், கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தஞ்சை மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பு முத்துமீனாட்சி கோட்டாட்சியர் வேலுமணி தாசில்தார் வெங்கடேசன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்