தஞ்சை ஜன: 6 , தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் குடி நீர் 2020 21 திட்டத்தின் கீழ் ரூபாய் 1.69 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அனைத்து வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் ஒரத்தநாடு ஒன்றியம் பகுதியில் உள்ள தெற்கு நத்தம் கீழநத்தம் ஆழிய வாய்க்கால், ஆகிய கிராமங்களில் ரூபாய் 75.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளை மற்றும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது தெற்கு நத்தம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் இணைப்பையும் புதிதாக கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம், லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தொடர்ந்து நெடுவாக்கோட்டை கோவிலூர் ஆகிய கிராமங்களில் ரூபாய் 39.53 லட்சம், மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகளையும் கோவிலூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியையும் நாடார் தெருவில் வழங்கப்பட்டு புதிய குடிநீர்ழாய் இணைப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மொத்தம் 240 இணைப்புகள் வழங்கப்பட வேண்டிய இதில் இதுவரை 85 புதிய இணைப்புகள்வழங்கப்பட்டுள்ளன தொடர்ந்து தெற்கு தெரு மேல காலனி மாதவன் குடிக்காடு நடுத்தெரு திருமங்கக்கோட்டை மேற்கு ஆகிய குக்கிராமங்களில் ரூபாய் 54.46 லட்சம், மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளை மேல காலனியில் ஆய்வு செய்தார், இங்கு மொத்தம் 223 புதிய இணைப்புகள் வழங்க திட்டமிட்டு இதுவரை 96 புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் கூறுகையில் பணிகளை தரமாகவும் மிக விரைவாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார், மாவட்ட ஆட்சியர் ஆய்வின் போது அதிகாரிகள், ஆழிய வாய்க்கால் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராசு, மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்