தஞ்சை பிப் 11,

வருகின்ற சனிக்கிழமை பிப் 13 அன்று மாலை ஐந்து மணிக்குபெசண்ட் அரங்கில் தஞ்சை ப்ரகாஷ் அவர்கள் எழுதிய புரவி ஆட்டம், டிராய் நகரப்போர், ஞாபகார்த்தம், தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள் நேர்காணல்கள் என்கின்ற நான்கு நூல்களும், அவரது வாழ்க்கை குறித்து, திருமதி. மங்கையர்க்கரசி ப்ரகாஷ் எழுதிய ஒரே தரம் என்கின்ற நூலும் சேர்த்து ஐந்து நூல்கள், நந்தி பதிப்பகத்தின் நந்தி செல்லத்துரை வாயிலாக வெளிவருகிறது.

இவ்விழாவினை நெருஞ்சி இலக்கிய இயக்கம் முன்னெடுக்கின்றது, தஞ்சைப்ரகாஷ் இலக்கிய சிந்தனை வட்டத்தோடு நந்தி பதிப்பகமும் இணைந்துசெயல்படுகிறது.

ஓரு மனிதன் தன் வாழ் நாள் முழுக்க தனது முதன்மை பணியாக இலக்கியத்தை பேசவும், வாசிக்கவும், எழுதவும், இலக்கிய ஆர்வலர்களை உற்சாகப்படுத்தி எழுதச் செய்வதுமான வேலையயை மட்டும் கட்டற்ற ஆர்வத்தோடு செய்ய முடியுமா என்றால் தஞ்சை ப்ரகாஷ் ஒருவரைத்தான் சொல்ல முடியும்.

இவ்விழாவினை மேனாள் வணிகவரித்துறை அமைச்சர்,திருமிகு. சி.நா.மீ. உபயதுல்லா அவர்கள் தலைமையேற்கின்றார், பேராசிரியர்களும் படைப்பாளர்களும் வருகை தந்து நூல்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

செய்தி அமுதன்
துபாய்.