தஞ்சை மே 24: கொரோனா வைரஸ் பாதித்து மதுரையில் சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூா் நீதிபதி காலமானார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா் நீதிபதி வனிதா (55). இவர் திருச்சியிலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தார். சமீபத்தில் அங்கிருந்து மாற்றலாகி தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதி நிலையிலுள்ள மக்கள் நீதிமன்ற நிரந்தரத் தலைவராக பொறுப்பேற்றார்.


அன்றைய தினமே தனது மகள் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி விடுப்பில் தூத்துக்குடிக்குச் சென்றார். அங்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நீதிபதி வனிதா நேற்று உயிரிழந்தார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்