தஞ்சை.ஜன.18- தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை இந்தியன் ரெட் கிராஸ் செசைட்டியில் தஞ்சை முத்தரையர்கள் நல சங்கத்தின் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம் ஒரத்தநாடு முத்தரையர் கூட்டமைப்பு தலைவர் வி.துரை மாணிக்கம் தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டமைப்பின் துணை செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் சி.மணிமாறன் வரவேற்புரையாற்றினார். காராமணி தோப்பு ஜி.சேகர், நாட்டரசன்கோட்டை எ.நாகராஜன், திருப்பூர் முத்தரையர் எழுச்சி சங்க பொறுப்பாளர் ஜி.தர்மராஜ், கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை குமு தலைவர் டாக்டர் வே.மூக்கையன், துறையுண்டார் கோட்டை வழக்கறிஞர் எ.பிரபாகரன், அய்யம்பட்டி எ. குழந்தைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்னமநாடுஎல்.பன்னீர்செல்வம்,ஆர்.வி.ராஜலிங்கம், பொறியாளர் இ.எழிலரசன், ஒரத்தநாடு முத்தரையர் கூட்டமைப்பின் செயலாளர்பி.சித்ரக்குமார், கூட்டமைப்பின் பொருளாளர் ஜி.முருகேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு உரையாற்றினார்கள்.
தஞ்சையை தலைநகராக்கி ஆட்சி செய்த முத்தரையர் சோழகர்களுக்கு மணிமண்டபம் அமைக்கவும், வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் முத்தரையர் வேட்பாளர் ஒருவரை சுயேச்சையாக நிறுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும்.
முத்தரையர் சங்கத்தில் உள்ள 29 பிரிவுகளை ஒருங்கினைத்து கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20% உள் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். முத்தரையர் சமுதாயத்தை சார்ந்த உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவருக்கு தேர்வாணைய குழு உறுப்பினராக நியமனம் செய்யவும், கொரோனாவால் ஓராண்டு காலம் பாதிக்கப்பட்டு கடும் மழையால் விவசாயத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாத்திட தஞ்சை முத்தரையர்கள் நல சங்கம் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
க.சசிக்குமார், நிருபர்
தஞ்சை.