தஞ்சை ஏப். 5, தஞ்சை இந்த சட்டசபை என்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணிக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும் என தீராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறினார், சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.கே.ஜி. நீல மேகத்திற்கு ஆதரவாக தலைவர் கி வீரமணி பிரசாரத்தை நிறைவு செய்து பேசியபோது, தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து விட்டேன் ஆனால் கடந்த தேர்தலிருந்து இந்த தேர்தலுக்கும் தனி சிறப்பம்சம் இருக்கிறது கடந்த தேர்தல்களில் வாக்காளர்களை வேட்பாளர்கள் சந்தித்து வாக்கு கேட்பது ஆனால் இந்த தேர்தலில் வேட்பாளரை முன்கூட்டியே முடிவு செய்து வாக்காளர்கள் தேர்வுசெய்து வாக்களிக்க முடிவு செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 120 நாட்களாக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் இவர்களை ஒரு நாள் கூட பிரதமர் மோடி சென்று பார்த்தது இல்லை, இந்த நிலையில் இங்குள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாய சட்டங்களால் பாதிப்பில்லை என கூறுகிறார், அடமானம் வைக்கப்பட்ட உரிமைகளை மீட்க வேண்டிய நேரமிது எனவே மக்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்கு ஸ்டாலின் ஒருவரால்தான் முடியும் எனவே தஞ்சை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி கே ஜி நீல மேகத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வைத்த தயாராகிவிட்டனர் பொய் மூட்டைகளை எவ்வளவுதான் அவிழ்த்து விட்டாலும் மக்கள் நம்பப் போவதில்லை இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி பூஜ்ஜியம் தான் கிடைக்கப்போகிறது ராஜீயம் கிடைக்காது இவ்வாறு அவர் உரையாற்றினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.