தஞ்சாவூர் 18 தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண்மை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி முதல்வர் வேலாயுதம், பொதுமக்களுக்கு அளித்துள்ள செய்திக்குறிப்பில் மன உளைச்சலில் அவதிபடும் அனைவரும் மாடித்தோட்டத்தில் பயிர்களை சாகுபடி செய்து உடல் நிலையில் முன்னேற்றம் அடையலாம் என்று கூறியுள்ளார்.

மாடி கட்டிடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் தமக்கு தேவையான கீரை காய்கறிகள் பழங்கள் இவைகளை நமது மாடிப் பகுதியில் வீட்டுத் தோட்டம் அமைத்து பயிரிட்டு பயன் பெறமுடியும்.

அழகிய பூக்களும் இந்த மாடி தோட்டங்களில் பூத்துக்குலுங்கும் விவசாய நிலத்தில் தான் இந்த காய்கறிகளையும் கீரையையும் பழங்களையும் பயிரிட முடியும் என்பது மாற்றப்பட்டு மாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களும் அன்றாட தேவைகளுக்கு தேவைப்படும் கீரைகளிலும் காய்கறிகளிலும் பழங்களிலும் பயிரிட்டு பயன் பெற முடியும்.

இது குறித்து பல்வேறு ஆராய்ச்சி வேளாண்மை துறை ஆராயப்பட்டு நல்ல முடிவுகள் கிடைத்திருக்கிறது நமது குடும்பத்தில் இருக்கும் அங்கத்தினர்கள் மட்டுமே இந்த மாடித் தோட்டத்தை பயன்படுத்தலாம் குறைந்த செலவு நிறைந்த லாபம் நாம் பயிரிடும் காய்கறிகளையும் பழங்களையும் கீரைகளையும் நாமே உண்ண முடியும்.

நிலம் இல்லை என்ற எண்ணுபவர்களுக்கு இந்த மாடித் தோட்டம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. மன உளைச்சலில் அவதிப்படும் பொதுமக்கள் இத்தகைய மாடி தோட்டம் அமைக்கும் போது மன உளைச்சலில் இருந்து விடுபட முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சிகள் மூலம் தெரிவிக்கிறது.

தினந்தோறும் நாம் வளர்க்கும் பூக்களையும் காய்கறிகளையும் பழங்களையும் கீரைகளையும் நமது வீட்டு மாடித் தோட்டத்தில் காணும்போது நம் மனம் மகிழ்வோம் மன உளைச்சல் இல்லாமல் பசுமை எண்ணத்தோடு செயல்படுவோம் அதை நாம் உண்ணும் போது நல்ல உடல் நலம் வலிமை பெறுகிறோம், குறைந்த அளவு நீர் மேலாண்மை இந்த மாடித்தோட்டத்தில் பயன்படுத்தலாம் என்பது நிதர்சன உண்மை எனவே மாடித் தோட்டங்களை அமைத்து மக்கள் மகிழலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/