தஞ்சை பிப்; 29, தஞ்சையில் பத்து ரூபாய் இயக்கம் தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் அமைப்பு சார்பில் இலவச சட்ட பயிற்சி வகுப்பு மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது நிகழ்வுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தாராவ் தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் சிவக்குமார் முன்னிலை ஏற்றார்.

கூட்டத்தில் மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தும் மக்கள் நலனுக்கான சட்டங்களை மதித்து நடக்க வேண்டும், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக சட்ட அறவழியில் கோரிக்கைகளை அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வழிமுறைகள், லஞ்ச லாவண்ய ஊழலற்ற தேசத்தை உருவாக்கிட நேர்மையான வகையில் களப்பணி செய்திட உறுதிமொழி ஏற்கப்பட்டது இதில் மாநில பொதுச் செயலாளர் நல்வினை விஸ்வராஜு உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்,