தஞ்சை ஜூன்: 2, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விளையாட்டுத்திடலில் தற்காலிகமாக சிகிச்சை மையம் 200 ஆக்சிஜனுடன் ஆகியவற்றுடன் கூடிய படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருவதை ஆட்சியர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.

மருத்துவ கல்லூரி மருத்துவமனை விளையாட்டுத்திடலில் 200 ஆக்ஸிசன் உருளிகளுடன் கூடிய படுக்கை வசதி கூடிய தற்காலிகமாக நோயாளிகள் சிகிச்சை அளிக்கும் வண்ணம் ஆவண செய்யப்பட்டு வருகிறது.

இந்த பணியை ஆட்சியர் கோவிந்தராவ் பார்வையிட்டார். மேலும் டாக்டர்கள் பரிசோதனை செய்யக் கூடிய பகுதியில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முதலியவற்றை உதவி செய்ய அலுவலர்களை அறிவுறுத்தினார். அனைத்து படுக்கை வசதிகளுடன் ஆக்சிசன் செறிவூட்டிகளுக்கு மின் இணைப்பு வசதி தரும் வகையில், தேவையான அளவு மின் இணைப்புகள் வழங்கவும், அதேபோல் மின் விசிறிகள் இணைப்பு வழங்கவும், பொதுப்பணித் துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அரங்குக்காண அணுகு சாலை அமைக்கவும், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான அளவு கழிவறை வசதிகள், அரங்கை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கவும் அலுவலகத்தில் ஆட்சியர் அறிவுறுத்தினார். மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார், கண்காணிப்பாளர் மருதுதுரை, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பழனி ஆர்டிஓ வேலுமணி, மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை