தஞ்சாவூர் செப் 02: தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த ஆச்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளி 9. 10 வகுப்பு மாணவர்களை ஆசிரியர்கள் பூத்தூவி வரவேற்றனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த ஆச்சனூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 9, 10 ஆம் வகுப்புகளில் 120 மாணவ, மாணவிகள் படித்துவருகிறார்கள். கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டு இருந்த பள்ளிகள் தற்போது அரசின் புதிய விதிமுறைப்படி திறக்கப்பட்டது.

9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆச்சனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசு விதிமுறைப்படி வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டும், கைகளுக்கு கிரிமிநாசினி மூலம் சுத்தம் செய்து, சமூக இடைவெளி கடைபிடித்து ஒருவர் பின் ஒருவராக பள்ளி வகுப்பறைகளுக்கு வந்துகொண்டிருந்தனர்.

அப்போது பள்ளி தலைமையாசிரியை கோமலவள்ளி மற்றும் இருபால் ஆசிரியர்கள் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மலர்கள் தூவி கைத்தட்டி வரவேற்று, இனிப்புகள் வழங்கினார்கள். மாணவர்கள் மிகவும் சந்தோசத்துடன் பள்ளியில் அமர்ந்து பாடங்களை கற்றனர். இந்த நிகழ்வு அனைவரின் மனதையும் மகிழ்விக்க செய்தது.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/