தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நல்லாசிரியா் விருது பெறும் ஆசிரியா்கள், அவா்கள் பணியாற்றும் பள்ளி விவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாதவன் – தலைமையாசிரியா், அரசு உயா்நிலைப் பள்ளி கண்ணந்தங்குடி மேலையூா், குழந்தைசாமி – இடைநிலை ஆசிரியா், தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூா், திருநாவுக்கரசு – தலைமையாசிரியா் அரசு உயா் நிலைப்பள்ளி, கோவிலடி, நாகேஸ்வரன் – முதுகலை ஆசிரியா், பாணாதுரை மேல்நிலைப்பள்ளி, கும்பகோணம்.

தமிழ்செல்வன் – உடற்கல்வி ஆசிரியா், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மேம்பாலம், தஞ்சாவூா், காஜாமொகைதீன் – இடைநிலை ஆசிரியா், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, பேராவூரணி, ராமநாதன் – இடைநிலை ஆசிரியா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரிய தெற்குகாடு, பேராவூரணி, புகழேந்தி – இடைநிலை ஆசிரியா், கணேசா வித்யாலயா நடுநிலைப்பள்ளி, பூக்காரத்தெரு, தஞ்சாவூா்.

சிவசங்கா் – தலைமையாசிரியா் – உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, வேப்பத்தூா், எழிலரசி, தலைமையாசிரியை ஆதி திராவிடா் நலத் தொடக்கப்பள்ளி, கண்டியூா், தமிழ்செல்வி, முதல்வா், அருள்தந்தை லூா்து சேவியா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திருக்காட்டுப்பள்ளி. இவா்களுக்கான விருது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவில் வழங்கப்படவுள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/