தஞ்சை மே 21 : தஞ்சை அருகே நாஞ்சிகோட்டையில் தினமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடெங்கும் கொரோனாத் தொற்று வேகமான வகையில் பரவி வருகின்றது, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல்வேறு போர்க்கால நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றது அதில் தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பல்வ‍ேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டம் நாஞ்சிகோட்டை ஊராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மறியலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தினமும் சளி பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகள் செய்யப்பட்டு மற்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கான ஏற்பாடுகளை நாஞ்சிகோட்டை ஊராட்சித் தலைவர் சத்யராஜ் மற்றும் மருங்குளம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்