தஞ்சை பிப் 13, தஞ்சை இன்‍று சனிக்கிழமை மாலை 5:00 மணிக்கு திராவிடர் மனித உரிமை அமைப்பு, திராவிட தமிழர் கட்சி மற்றும் பெரியார் மையம் இணைந்து கருந்தரங்கம் தஞ்சை பழைய நீதி மன்ற சாலை‍யில் அமைந்துள்ள சரோஜினி நினைவரங்கத்தினில் ஏற்பாடு செய்துள்ளது, இதில் சிறப்புரையாக எழுத்தாளர் வே.மதிமாறன் அவர்கள் “பெரியார் அம்பேத்கர் பார்வையில் காந்தி” என்றத் தலைப்பில் பேசுகின்றார்.

சரியாக மாலை 5:00 மணிக்கு தொடங்கும் இவ்விழாவிற்கு சந்தன டெய்சிராணி வரவேற்புரையும், வழக்கறிஞர் இளமதி தலைமையேற்கும் இவ்விழாவில் அறிவுடைநம்பி வி.சி.க, சி.குணசேகரன் இணைச்செயலாளர் தமிழ்த்தேசிய பாதுகாப்புக் கழகம்,செல்ல.கலைவாணன் திராவிட இயக்க தமிழர் பேரவை ,ஜெய்னு ஆபிதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தி.பாலாஜி மே 17 இயக்கம், வழக்கறிஞர் செ.கு ஆதலினால் காதல் செய்வீர் அறக்கட்டளை, பனசை அரங்கன் தேசிய மக்கள் சக்தி கட்சி, அருண் மாசிலாமணி புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் பாசறை, ஜாகிர் உசேன் SDPI, பா.வீரலெட்சுமி மகளிர் அணி தி.மு.க, ஐ.எம்.பாதுஷா மனித நேய மக்கள் கட்சி மற்றும் பூங்குன்றன் அவர்களும் உரை நிகழ்த்துகின்றனர் கலா பெரியார் மையம் நன்றியுரை ஆற்றுகின்றார்.

செய்தி நிருபர் தஞ்சை டுடே.