தஞ்சை ஏப்ரல் 02 தஞ்சை மாவட்டம் விஜயகாந்த் முரசு சின்னத்தை காண்பித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அப்போது அவர் வேனில் நின்றபடி கைகூப்பி வணக்கம் தெரிவித்தார், தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிற 6-ஆம் தேதி நடைபெறும் இதை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த கூட்டணி சார்பில் தஞ்சை மற்றும் பேராவூரணி தொகுதியில் தேமுதிக போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவருடைய மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள், தஞ்சை தொகுதியில் டாக்டர் ராமநாதனும், பேராவூரணி தொகுதியில் முத்து சிவகுமாரும் போட்டியிடுகின்றார்கள்.

தஞ்சை மற்றும் பேராவூரணி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தஞ்சையில் பிரச்சாரம் செய்தார், இதற்காக அவர் திருச்சியில் இருந்து வேனில் இரவு 8.40 மணிக்கு தஞ்சை வந்தார், தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே வேனில் நின்றபடி கைகளை தூக்கி காண்பித்து வணக்கம் வாக்கு சேகரித்தார், தேமுதிகவின் சின்னமான முரசு சின்னத்தை காண்பித்து வாக்கு சேகரித்தார், வேனில் சுற்றி வந்தபடி அனைவரும் வணக்கம் தெரிவித்த படி வாக்கு சேகரித்தார், பின்னர் அவர் அங்கிருந்த பெரம்பலூர்புறப்பட்டுச் சென்றார் அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர், விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை ஒட்டி தேமுதிகவினர் எஸ்டிபிஐ கட்சியினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.