தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்க முப்பெரும் நிகழ்ச்சியில்
மக்கா மதினா ஈமான் அறக்கட்டளையின் சார்பில்… கூலர் பாக்ஸ், ஸ்டீல் கட்டில் மற்றும் 100 இருக்கைகள் சேவையாக வழங்கப் பட்டது.

தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த திருவள்ளுவர் தினம், உலக அமைதி தினம் மற்றும் சங்க செயலாளர் லயன் சம்பத் அவர்களின் திருமணநாள் விழா ஆகிய முப்பெரும் விழா சேவைத் திருநாளாக கிளாஸிக் மஹால் திருமண மண்டபத்தில் நடந்தது.

காலை வடக்கு வாசல் அன்பாலயம் மனநலக் காப்பகத்திற்கு உணவு வழங்கி சேவை திருநாளை தொடங்கி, கரந்தை உமா மகேஸ்வரனார் கலைக் கல்லுரியில் மாணாக்கர்களுக்கி இரத்ததான விழிப்புணர்வு கொடுத்தும், சுமார் 35 யூனிட்டுகள் இரத்தம் தானமாக, செஞ்சுலுவை சங்க மாவட்டப் பொருளாளர் முத்துக்குமார் முன்னிலையில் ஏழை நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு பெற்றுத்தந்தனர்.

அதன் பின் திருவேங்கிட நாட்டார் கல்லூரியில் மரக்கன்றுகள் நட்டும், சேவைகளையும் செய்து பின்னர் மீண்டும் கரந்தைக் கல்லூரியில் இரத்ததானம் கொடுத்த மாணாக்கர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர். மதியம் மீண்டும் அனாலயம் மனநலக் காப்பகத்திற்கு மதிய உணவினை வழங்கினர்.

மாலை நிகழ்ச்சியாக மேடையில் சிறப்பு விருந்தினர் அரசியல் பிரமுகர், தமிழ் ஆளுமை, நடிப்பிலும் தன் திறமையை நிரூபித்து வருகின்ற நாஞ்சில் சம்பத் அவர்கள் வருகையுடன் லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் சீனிவாசன், முகமது ரபிக் ஆகியோர் முன்னிலையில்…

மக்கா மதினா ஈமான் அறக்கட்டளை சார்பில்
சுமார் 1.5 லட்சம் மதிப்பிலான கூலர் பாக்ஸ், ஸ்டீல் கட்டில் மற்றும் 50 இருக்கைகளை ஏழை மக்கள் முற்றிலும் இலவசமாக பயன்படுத்த கீழவாசல் அல்லமா இக்பால் நற்பணி மன்றத்திற்கு சேவைகளாக வழங்கப்பட்டது.

மேலும் மாற்றுத் திறனாளி பெண் ஒருவருக்கு ரூ 6,000 மதிப்பிலான தையல் இயந்திரத்தை ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் மற்றும் ஐயா ஃபுட்ஸ் நிறுவனம் வழங்கியது.

மற்றொரு சேவையாக நடைபாதை வியாபாரி ஒருவருக்கு லயன்ஸ் மாவட்ட ஆளுநரின் சிறப்புத் திட்டமான ரூ 8,000 மதிப்பிலான தள்ளுவண்டி ஒன்றினை சங்கத்தின் லயன் கண்ணன், சம்சுதீன் மற்றும் ராஜ சேகர் இணைந்து வழங்கினர்.

காலை முதல் இரவு வரை நடந்த நிகழ்ச்சிகளில் லயன்ஸ் சங்கங்கள், தனனர்வலர்கள் பொது மக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

மேடையில் கொரோனோ காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்கத்திற்கு தமிழக அரசு சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் உயர்திரு ம. கோவிந்தராவ் அவர்கள் குடியரசு தின நிகழ்ச்சியில் வழங்கிய சேவை விருதினை சங்கத்தின் பிரதிநிதி லயன் ஸ்டாலின் மாவட்ட ஆளுநர்களிடம் இருந்து பெற்று பாராட்டு பெற்றார்.

மேலும் சமீபத்தில் நடந்த ஆசிரியர் தின விழா நிகழ்ச்சியில் சங்கத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு நல்லாசிரியை விருது பெற்ற சங்கத்தின் துணைப் பொருளாளர் லயன் சம்சுதீனின் சகோதரி திருமதி…. அவர்களை அழைத்து கௌரவம் செய்தனர்.

நிறைவாக சங்க செயலாளர் லயன் சம்பத் அவர்களின் திருமண நாள் விழா கொண்டாடப்பட்டு இனிதான சேவைத் திருவிழா நிறைவுற்றது. நிகழ்ச்சியில் சுமார் 300 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு லயன்ஸ் சங்க சேவைகளை கண்டு பிரம்மித்து பாராட்டி மகிழ்ந்தனர்.

செய்தி புயலரசு நிருபர்
சவூதி.