தஞ்சாவூர் சூலை 24 இன்று தஞ்சை வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் 5000 பனை விதைகள் மற்றும் 5000 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்.

இன்று கள்ளப்பெரம்பூர் ஏரி கரையில் சுமார் 5000 பனை விதைகள் 5000 மரக்கன்றுகள் நடும் மாபெரும் பணி தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் பராம்பரிய மரம் என்பது பனை மரமாகும், அது பராம்பரிய மரம் மட்டுமல்லாது தண்ணிரை தேக்கி நிலத்தடி நீரின் வளத்தை பெருக்கும் மரமாகும். ஒரு பனை மரம் காய்த்து பலன் தருவதற்கு 15யிலிருந்து 20 ஆண்டுகள் வரையாகும் என்பார்கள்.

தமிழர்களின் கல்வியையும் இலக்கியத்தையும் கடத்திய பெருமை பனை நறுக்குகளுக்கே உண்டு.
அத்தகைய பனை விதைகளை இன்று கள்ளப்பெரம்பூர் ஏரியைச் சுற்றிலும் தஞ்சை வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் மூலம் நட்டுள்ளனர். காலங்கள் கடந்து பயன் தந்தாலும் நீரை நிறுத்தி நிலையான பலன் தருமென்பதில் எவ்வித அய்யமுமில்லை.

அதேப்போல் மற்ற பலன் தரும் 5000 மரக்கன்றுகளையும் அந்த ஏரிப்பகுதியைச் சுற்றி நடுவதற்கான பணிகளையும் தஞ்சை வசந்தம் லயன்ஸ் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இன்று தொடங்கினர்.

செய்தி தஞ்சை டுடே நிருபர்.
http://thanjai.today/