தஞ்சாவூர், சன.25- தஞ்சை ஒன்றியம் சார்பாக மனோஜிப்பட்டியில் திராவிடர் மாணவர்கள் கழக சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. திராவிட மாணவர்கள் கழக சந்திப்புக் கூட்டம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் மனோஜிப்பட்டி கவி இல்லத்தில் திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா. செந்தூரபாண்டியன் தலைமையில் தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆட்டோ. ஏகாம்பரம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பா. விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் மக்கள் நல தொண்டறத்தையும், அவர்களின் ஓய்வரியா அயராத பணிகளையும், உழைப்பு பற்றியும், திராவிடர் கழக பணி பற்றியும், மாணவர்கள் எதிர்கொள்ளும் நீட் புதிய கல்வி கொள்கை போன்ற கல்வி ரீதியான தொடர் போராட்டங்களையும் திராவிட மாணவர் கழகம் அதற்காகப் போராடி வந்த சூழலயும்.ஏன் கருப்புசட்டை அணியவேண்டும். என மிக விளக்கமாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

கூட்டத்தின் இறுதியில் மாணவர்கள் திராவிட மாணவர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டு செயல்படுவோம் என மாணவர்கள் தெரிவித்தார்கள். வருகின்ற ஜனவரி 26 நடைபெறுகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மாணவர்களும் கலந்து கொள்கிறோம் என தெரிவித்தார்கள். அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் செ. ஆகாஷ் திராவிடர் மாணவர் கழக சந்திப்புக் கூட்ட ஏற்பாடுகளை செய்திருந்தார்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/