தஞ்சை ஜன 30ல் சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள குறைபாட்டை களைய கோரி தஞ்சையில் வரி ஆலோசகர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் உதவி ஆணையர் சுரேஷ்குமார் மீனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர் வரி ஆலோசகர்கள் சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கணேசன் முன்னாள் தலைவர் மோகன் பொருளாளர் தியாகராஜன் நிர்வாக செயலாளர் ராமகிருஷ்ணன் துணைத் தலைவர் புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் பலர் தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்திற்கு நேரில் சென்று அவர்கள் கோரிக்கை மனுக்களை சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையர் சுரேஷ்குமார் மீனாவிடம் நேரில் சந்தித்து கோரிக்கைகளை கூறி மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது ஆலோசகர்களுக்கு தனி நல வாரியம் மத்திய அரசு அமைக்கப்பட வேண்டும் வரலாறு வடிவங்களில் சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர்கள் கையொப்பமிடும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் ரிட்டன் தாக்கல் செய்யப்படுவது எளிமைப் படுத்தப்பட வேண்டும் அனைத்து ரிட்டன் வடிவத்திலும் குறிப்பு எழுத தனி காலம் அமைக்கப்படவேண்டும் சிறு வியாபாரிகளுக்கு தாமத கட்டணம் ரத்து செய்யப்படவேண்டும் வணிகர்கள் முறையாக வரி செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜிஎஸ்டி இணையதளத்தை எளிதான கையாள மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நடைபெற இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வர்த்தகர்களுக்கும் வரி ஆலோசகர்களுக்கு அதிகாரிகளுக்கும் மன உளைச்சலைத் தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வணிக கூட்டமைப்பு தலைவர் என்ஜினியர் என்டி பாலசுந்தரம் தலைமையில் செயலாளர் ஆனந்தன் பொருளாளர் சத்யநாராயணன் துணைத் தலைவர் மாதவன் இணைச் செயலாளர் குனேஸ்வரன் ஆகியோர் இணைந்து சரக்கு மற்றும் சேவை வரி உதவி ஆணையரிடம் மனு அளித்தனர் அந்த மனுவில் சரக்கு மற்றும் சேவை வரிகள் அதிக அவதார வற்றினாலும் ஜிஎஸ்டி இணையதள பிரச்சனைகளாலும் வணிகர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஜிஎஸ்டி படிவம் தாக்கல் செய்யாவிட்டால் ஜிஎஸ்டி பதிவு ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மாதத்திற்கு ரூபாய் பத்தாயிரம் வரை தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது வணிகர் சங்கங்களின் முறை வீடுகளுக்கும் உரிய நிவாரணம் கிடைப்பதில்லை இந்த குறைபாடுகளை களைய மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் ஜிஎஸ்டி பதிவை ரத்து செய்ய வேண்டும் அவதார வட்டி தாமத கட்டணம் ஆகியவற்றை முழுமையாக கைவிட வேண்டும் போடப்பட்டு இருந்தது இந்த அலுவலகத்திற்கு வெளியே வந்த தொழில் மற்றும் வணிக கூட்டமைப்பினர் இவரி ஆலோசகர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

‍செய்தி : க.சசிகுமார், நிருபர்,
தஞ்சை.