தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க 12வது மாநில பொதுக்குழுக் கூட்டம் மற்றும் மருத்துவ கருத்தரங்கம் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் மருத்துவர் கார்த்தீஸ்வரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மருத்துவர் அகிலன் முன்னிலை வகித்தார். கருத்தரங்கத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சாவூர் மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் ரமேஷ் குமார், தஞ்சாவூர் மாநகர் நல மருத்துவ அலுவலர் நமசிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுரேஷ் காலே, முடநீக்கியல் துறை மருத்துவர் செந்தில் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் கடந்த ஆண்டில் கோவிட் தொற்றாலும், பிற காரணங்களாலும் மறைந்த மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் தயாரித்த கோவிட் விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது. ஊதிய உயர்வு, சர்வீஸ் கோட்டா, தடுப்பூசிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட மருத்துவ அலுவலர்கள் சங்க தலைவர் பாலமுரளி செய்திருந்தார். தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில நிர்வாகிகள் அறிவொளி, பூவரசன், சுரேஷ், யோகேஸ்வரன், மகேஷ்குமார், சதீஷ்குமார், கணபதி, ரகு, இராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாநிலப் பொருளாளர் மருத்துவர் ரங்கசாமி நன்றியுரை கூறினார்.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/