தஞ்சை ஏப்ரல் 24 தஞ்சை மேடை நடன கலைஞர்கள் மற்றும் ஒலி ஒளி அமைப்பாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வலியுறுத்தி பிச்சை எடுத்தும் நடனமாடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர், கொரோனா பரவல் காரணமாக திருவிழா, மேடை நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதனால் கோவில் திருவிழாக்கள் இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிராமியக் கலைஞர்கள் மேடை நாடகக் கலைஞர்கள் அதை சார்ந்த தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தினர் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முதல்வருக்கு மனுக்களை அனுப்பினர், இந்த நிலையில் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பாக தஞ்சாவூர் மாவட்ட மேடை நடன கலைஞர்கள் மற்றும் ஒலி ஒளி அமைப்பாளர்கள் இணைந்து கையில் உண்டியவுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்திற்கு தலைவர் தர்மலிங்கம் செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர் அப்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பிச்சை எடுக்கும் நிலையில் மேடை கலைஞர்கள் இருப்பதாக உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என கோஷமிட்டு வழியாக சென்றார் பொதுமக்களிடம் பிச்சை எடுத்தனர்.

பின்னர் தலைவர் தர்மலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது கடந்த 2018 கஜா புயல்,2019 பாராளுமன்ற தேர்தல், 2020 கொரோனா ஊரடங்கு ஏற்கனவே மூன்று ஆண்டு வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது இந்த நிலையில் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக கலைஞர்களின் நிலைமை மோசமாகிவிட்டது பொது இடங்களில் இரவு 7 முதல் 10 மணி வரை நிகழ்ச்சி நடத்த அனுமதி இருந்தும் இரவு ஊரடங்கு கால் அதுவும் நடத்த முடியாமல் போய்விட்டது அரசு எங்களின் வாழ்வுக்காக கலை பண்பாட்டுத்துறை உறுப்பினர்களாக பதிவு செய்து கிராமியக் கலைஞர்களுக்கு வழங்குவது போல நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்,