தஞ்சாவூர் செப் .26- தஞ்சை சீனிவாசன் பிள்ளை சாலையில் நெரிசலை குறைக்கும் வகையில் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனிவாசம் பிள்ளை சாலையில் ஏராளமான பல கடைகள் உள்ளன, இது தவிர வணிக நிறுவனங்கள் வங்கிகள் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன, நகரின் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியில் இதுவும் ஒன்றாகும்.

இதற்கு சாலையில் அங்குமிங்குமாக வாகனங்களை நிறுத்தி செல்வது வெகு நேரமாகியும் வாகனங்களை எடுக்காமல் அப்படியே வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சொல்லப்படுகிறது, இதனால் சாலையில் பெரும்பகுதி வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சாலை குறுகியதாக காணப்பட்டது.

இதன் காரணமாக இந்த சாலையில் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும், இதனை தடுக்க போக்குவரத்து துறை காவல் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் மாநகராட்சி அதிகாரி கண்ணதாசன் ஆகியோர் பணியாளர்களுடன் சீனிவாசம் பிள்ளை சாலைக்கு வந்தனர் பின்னர் சாலையோரத்தில் வாகனங்கள் முறையாக நிறுத்தி வைக்கப்படும் பாதையில் சாலையின் இருபுறமும் கயிறு வைத்து கட்டப்பட்ட இதன்மூலம் சாலையில் அங்கும் இங்குமாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது தடுக்கப்படும்.

அதையும் மீறி சாலையில் வாகனங்களை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட வாகன எண்ணை வைத்து ஆன்லைன் மூலம் அபதாரம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன் கூறியபோது தஞ்சை சீனிவாசன் பிள்ளை சாலையில் போக்குவரத்து நெரிசலில் குறைக்க சாலையில் எல்லைக் கயிறு கட்டப்பட்டுள்ளது, விதிமுறையை மீறி வாகனங்களை நிறுத்தினால் அபதாரம் விதிக்கப்படும்.

மேலும் தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை திருவாரூர் நாகை திருத்துறைப்பூண்டி பேராவூரணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் 25-ம் தேதி முதல் ரயில்வே கீழ் பாலத்திலிருந்து வலது புறம் திரும்பி செல்லாமல் சுப்பையா பிள்ளை பழக்கடை சாலை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/