தஞ்சாவூர்செப் 18 பிறந்த நாளான செப் 17ம் நாள் தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியும் பெரியாரின் சிலைக்கு திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சமூக நீதி நாள் கடைபிடித்து உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

அப்போது கல்லூரி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் தஞ்சையில் உள்ள அரசு அலுவலகங்களில் சமூகநீதி நான் கடைபிடிக்கும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமையிலும் அதேபோல் ஆதித்தமிழர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் தலைமையில் பெரியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து சமூக சமத்துவத்தை என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டது.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் மாலதி சிட்டிபாபு தலைமையில் மாலை அணிவித்தனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அன்பரசன் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 149 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அமர் சிங் தலைமையில் திராவிடர் கழகத்தினரும் திமுக சார்பில் எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் டி கே ஜி நீலமேகம் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உள்ளிட்டோரும் அதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நல்லிணக்க உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/