தஞ்சாவூர் அக்,11- தஞ்சாவூர் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை மேலவீதி அய்யங்குளம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் அய்யங்குளத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேலும் தெற்கு வீதியில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆய்வு செய்தார் மேலும் அய்யங்குளத்திற்கு செல்லுக்கூடிய நீர்வழிப்பாதையையும் பார்வையிட்டார்.
தஞ்சை தெற்கு வீதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா தடுப்பூசி நடமாடும் வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார் கடை பணியாளர் தடுப்பூசி போடப்படுவது பார்வையிட்டார் முன்னதாக அவர் தனது வாண்டையார் இருப்பு ஊராட்சி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்து நெல்லை தாமதமின்றி விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/