தஞ்சை: பிப். 11, தஞ்சை மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் அலுவலக உதவி இயக்குனர் ரமேஷ்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தஞ்சை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை எதிர்வரும் 13ஆம் தேதி நடைபெறுகிறது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8:30 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறுகிறது இதில் சென்னை திருப்பூர் கோவை தஞ்சை கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த முகாமில் ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை படித்தவர்கள் டிப்ளமோ ஐடிஐ பட்டதாரிகள் மற்றும் என்ஜினியரிங் தகுதிக்குரிய வேலை நாடுகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர் இதில் வேலைவாய்ப்பு நிறுவனம் கலந்துகொண்டு நர்சிங் தகவல் தொழில்நுடபம், இங்கிலாந்து சவுதி அரேபியா மற்றும் ஓமன் நாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்காக ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது .

தையல், பியூட்டிசியன், டிரைவிங், கணினி பயிற்சி உள்ளிட்ட இலவச திறன் பயிற்சிக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற அவர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

எனவே விருப்பமுள்ளவர்கள் சுயவிவர அறிக்கை கல்வி சான்றிதழ் ஆதார் அட்டை பாஸ்போர்ட் அளவு புகைப்படம் முன் அனுபவம் இருந்தால் அதற்கான சான்றிதழுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம், முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை அளிப்போர் மற்றும் வேலையை நாடுபவர்கள் தங்களது சுய விபரங்களை WWW. tuprivatejobs.tn.gov.in என்ற வலைதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் மேலும் விவரங்களுக்கு  O4362 237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.