தஞ்சாவூர் செப் 25 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் திறந்துவைத்தார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொன்னாப்பூர் மேற்கு கிராமத்தில் உள்ள அமிர்தம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூபாய் 82 ஆயிரம் மதிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அங்கு உள்ள பள்ளி கட்டிடத்தில் புதிதாக நூலகம் ஒன்று அமைத்து பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க புதிய நூலகத்தை அமைத்துக் கொடுக்கப்பட்டது.

இந்த நூலகத்தை தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் திறந்துவைத்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ராஜசேகரன் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிவேல் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கணேசமூர்த்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/