தஞ்சை சூலை 07, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா தென்னமநாடு கிராமத்தில் நடு தெருவை சேர்ந்தவர் செல்வம் (60) விவசாயி இவரது மனைவி இந்திரா (55) இவர்களின் மூத்த மகன் ராஜ்கண்ணன் (35) பட்டுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2011ம் ஆண்டு தேனியில் பயிற்சி காவலராக காவல் துறையில் சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக தஞ்சையில் உள்ள ஆயுதப்படை காவலர் பணியாற்றினார். ராஜ கண்ணன் தஞ்சை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியபோது அப்போதைய மாவட்ட எஸ்பி தர்மராஜ்க்கு (கன்மேன்) பாது காவலராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி தென்னமநாட்டிலிருந்து தஞ்சாவூர் எஸ்பி அலுவலகத்திற்கு பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கல்லணை கால்வாய் ஆற்றில் தஞ்சாவூர் மகநர்நோன்பு சாவடி விஜயா மண்டப தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராஜ்குமார் (20) என்பவர் தவறி விழுந்தார். போது அந்த வழியாக பணிக்கு சென்றுகொண்டியிருந்த காவலர் ராஜ்கண்ணன் ஆற்றில் குதித்து ராம்குமாரை உயிரோடு காப்பாற்றினார்.

அவரது செயலைப் பாராட்டி மாவட்ட எஸ்பி இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் உயிர் காக்கும் விருதுக்காக பரிந்துரை செய்யும்படி கேட்டுக்கொண்டார் அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரதமரின் விருதுக்கு பரிந்துரை செய்ததை அடுத்து கடந்த 2018ம் ஆண்டிற்கான உயிர்காக்கும் பிரதமர் விருது இவருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 14 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பட்டுக்கோட்டை காவலர் ஒருவருக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. இவரது மனைவி சரண்யா (32) ஒரத்தநாடு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிகிறார் இவர்களுக்கு திவான் (5), தீரன் ( 2 ) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today