தஞ்சை, மார்ச் 20- தஞ்சை பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் நேற்று 16-வது பட்டமளிப்பு விழா நடந்தது. 

கல்லூரி தலைமை அன்னை முனைவர் மரிய பிலோமி தலைமை வகித்து பேசுகையில், கிராமப்புற மக்கள். ஏழைகள், விவசாயிகள் போன்றோரின் பெண் குழந்தைகள் கல்வி கற்க வேன்டும் என்ற உயரிய நோக்கோடு 2002ம் ஆண்டு 50 மாணவிகளோடு தொடங்கிய இந்த கல்லூரியில் தற்போது 1448 இளம் மாணவிகள் பட்டம் பெறுகின்றனர். நீங்கள் இன்று பட்டத்தாரிகளாக உருவெடுக்க மிகப்பெரிய காரணம் உங்கள பெற்றோர்கள் தான். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெற்றோருக்கு கரவொலி எழுப்பி நன்றி கூறுங்கள் என்றார்.

கல்லூரி செயலாளர் முனைவர் மரியம்மாள் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கேத்தலினா கல்லூரி சாதனைகள் மற்றும் சிறப்புகளை ஆண்டறிக்கையாக வாசித்தார். சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு ஆயர் சபை சட்டத்துறை செயலரும், மூத்த வக்கீலுமான சேவியர் அருள்ராஜ் கலந்து கொண்டு மாணளிகளுக்குப் பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ‘தஞ்சையையும் தமிழையும் பிரிக்க முடியாது. ‘நடந்தாய் வாழி காவேரி’ என்று இளங்கோவடிகள் பாடியுள்ளார். காவிரி பாயும் தஞ்சையில் பெண் கல்வியை போற்றுவதில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி சாதனை படைத்து வருகிறது. பாரதி கண்ட புதுமைப்பெண்களாய்ப் பட்டம் பெறும் நீங்கள் கல்வியைக் கண் எனக் கருதி வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.

விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த 122 மாணவிகளுக்குப் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் இளங்கலை உயிர்த்தொழில் நுட்பவியல் மாணவி நிவேதிதா. இளங்கலை மருத்துவ நிர்வாகவியல் மாணவி சாகித்தா பானு ஆகியோர் முதலிடம் பிடித்துத் தங்கப்பதக்கம் பெற்றனர். 10 மாணவிகள் இரண்டாமிடத்தையும், 9 மாணவிகள் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

இளங்கலை மாணவிகள் 1154 பேர், முதுகலை மாணவிகள் 263 பேர் ஆய்வியல் நிறைஞர் மாணவிகள் 32 பேர் என மொத்தம் 1448 மாணவிகள் பட்டம் பெற்றனர். கல்லூரியின் முன்னாள் மாணவியா சங்கப் பேரவைத் தலைவி செர்லி பேசினார். பட்டமளிப்பு விழாவில் கல்வியாளர்கள், துணை முதல்வர்கள், புலத்தலைவர்கள், அனைத்துத் துறைதலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/