தஞ்சாவூர் செப்.12-தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2679 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூபாய் 1 கோடியே 57 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, புதுடெல்லி மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தஞ்சையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மதுசூதனன் தொடங்கி வைத்தார். தஞ்சையில் மூன்று அமர்வுகளில் இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. குடும்பநல கூடுதல் இது இந்திராணி முதன்மை சார்பு நீதிபதி சரவணகுமார் உலகில் மகா சண்முகம் ஆகியோர் தலைமையில் நடந்த, பாதையில் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு ரூபாய் 40 ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 904 தொகை வழங்கப்பட்டது.
இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முகவேல் மோட்டார் வாகன விபத்து வழக்கு சிறப்பு நீதிபதி அண்ணாமலை, வக்கீல் ஹெலன்ரோஸ், ஆகியோர் தலைமையில் நடந்த அமைவில் ரூபாய் 5 கோடியே 16 லட்சத்து 55 ஆயிரத்து 530 தீர்வு காணப்பட்டது கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி, வக்கீல் தம்பிதுரை, ஆகியோர் தலைமையில் நடந்த அமர்வில் குடும்பநல வழக்குகளுக்கு ரூபாய் 3 லட்சத்து 70 ஆயிரத்து தீர்வு காணப்பட்டது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றங்களில் மொத்தம் 679 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது இதன்மூலம் ரூபாய் 6 கோடியே 57 லட்சத்து 22 ஆயிரத்து 203 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட சட்ட பணி சார்பு செயலாளர் மற்றும் நீதிபதி சுதா மற்றும் நிர்வாக அலுவலர்கள் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/