தஞ்சை மே: 11, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது, நேற்று முன்தினம் மட்டும் 897 பேர் பாதிக்கப்பட்டனர் 428 குணமடைந்து வீடு திரும்பினார். அதேபோல் இதுவரை 29,652 பேர் ருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தஞ்சாவூர் கீழவாசல் ஆடக்கார தெருவில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதனால் அந்த பகுதியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனம் மூலம் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மேற்பார்வையில் துப்புரவு ஆய்வாளர் மோகனா தலைமையிலான பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று கொரோனா பரிசோதனைக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தனர் ஆனால் பலரும் வேற மருத்துவம் சிலர் வீட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்டனர்.

ஆனால் கீழவாசல் ஆட்டுக்கார தெருவில் வசிக்கும் மிட்டாய் தாத்தா என்று அழைக்கப்படும் 115 வயது ஆன முகமது அபு காசிர் தாமாக முன்வந்து நேற்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். மிட்டாய் தாத்தாவை, வெகுவாக பாராட்டினர்,

சென்னையில் முகமது அபுகாசிர் குடும்பத்தோடு வசித்து வந்த காலத்தில் அவரது மனைவியும் மகனும் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டனர், முகமது அபுகாசிர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்ததார், கடந்த எழுபது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்து தஞ்சைக்கு வந்து குடியேறினார், தஞ்சை கீழவாசல் அடுத்த தெருவில் தனியாக வசித்து வரும் முகமது அபு காசிர் வீட்டில் மிட்டாய் தயார் செய்து பள்ளிக்கூடங்கள் முன்பும் விற்பனை செய்து காலத்தை ஓட்டி வருகிறார், இதனால் அவரை இதனால் அவரை மிட்டாய் தாத்தா என்று குழந்தைகள் முதல் அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டு வருகின்றனர்,