தஞ்சாவூர் அக், 29- தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிரப்பாமல் உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்த வகையில் எமர்சன் டிபார்ட்மென்ட் செகரட்ரி ஒரு பணியிடத்திற்கு பட்டப்படிப்பு, அசிஸ்டன்ட் அண்ட் எமெர்ஜென்சி – கேர், பிசிசன் அசிஸ்டன்ட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் இதற்கு ஒப்பந்த ஊதியம் ரூபாய் 20 ஆயிரம் ட்ருமா ரெஜிஸ்டரி அசிஸ் டென்ட்ஸ், 2 பணியிடங்களுக்கு டிகிரி டிப்ளமோ மற்றும் கம்ப்யூட்டர் தெரிந்தவர்கள் தேவை.

மேற்கூறிய பணியிடத்திற்கு மாதம் ரூபாய் பத்தாயிரம் ஒப்பந்தம். இதேபோல் ஓடி டெக்னீசியன் பணியிடங்களுக்கு பல்கலைக்கழகம் இன் ஸ் டி. டி.யூசனில் 3 மாதம் ஓடி டெக்னீசியன் பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், இந்த பணியிடத்திற்கு ஒப்பந்த ஊதியம் ரூபாய் 15,000 இந்தப் பணியிடங்கள் பதினோரு மாதங்களுக்கு மட்டுமான தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

இப்பணியிடங்கள் பணி வரன்முறை செய்யப்படும் அல்லது நிரந்தரம் செய்யப்படவும் மாட்டாது என்று தெரிவிக்கப்படுகிறது. கல்வித் தகுதி உடையவர்கள் கல்வி சான்றுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரும் நவம்பர் 5ஆம் தேதிக்குள் முதல்வர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தஞ்சாவூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் இவ்வாறு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

க.சசிகுமார் நிருபர்,
https://thanjai.today/