தஞ்சாவூர் பிப் 16: வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்காக திமுக சார்பில் போட்டியிடும வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தஞ்சை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காணொலி மூலமாக நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பல்வேறு பகுதிகளிலும் எல்இடி திரை மூலமாக முதல்வரின் இந்த பிரச்சாரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வகையில் தஞ்சை அருகே வல்லத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பெரிய அளவிலான எல்இடி திரை வாயிலாக முதல்வரின் பிரச்சாரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் அருளானந்தசாமி மற்றும் வல்லம் பேரூராட்சி 15 வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/