தஞ்சாவூர் அக்:22- தஞ்சையில் உள்ளாட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தினக்கூலி பணியாளர்கள், சுய உதவிக் குழு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஏஐடியூசி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

மாநகராட்சி நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி முன்பு ஏஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் அனைத்து உள்ளாட்சிகளிலும் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தினக்கூலி பணியாளர்கள் மற்றும் சுய உதவி குழு பணியாளர்களை தாமதமின்றி பணிநிரந்தரம் செய்யப்படவேண்டும், ஒப்பந்த பணியாளர்களுக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள சம்பளம் உடனடியாக வழங்கப்பட வேண்டும், நகராட்சி இயக்குனரின் சுற்றறிக்கையின் படி தூய்மைப் பணியாளர்களின் சம்பளத்தை குறைக்க கூடாது, அனைவருக்கும் மலைக்கோட்டு, சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.

காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் ,பிஎஃப் நிதிக்கணக்கிற்கு.ரசீது முறையாக வழங்க வேண்டும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் அரசு பொறுப்பேற்று வீடுகட்டி தரப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. தஞ்சாவூர் மாநகராட்சி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், மாவட்ட துணைச் செயலாளர் துரை. மதிவாணன் , தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர் பி.செல்வம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ம.விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்
http://thanjai.today/