தஞ்சை ஜனவரி 18 தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
அண்ணா நகர் முனியாண்டவர் காலனி பகுதியில் பாதாளச்சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் தேங்குகின்றது இதனால் அந்தப்பகுதியெங்கும் துருநாற்றம் வீசி வருவதோடு நோய்த் தொற்றுக்களை பரப்பும் கொசுக்களும் உருவாகி வருகின்றன, மேலும் சாலையில் செல்லும் வாகனங்கள் சாக்கடை நீரை வாரி நடைவாசிகள், இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மீது வீசிச் செல்கின்றது.

இந்த உடைப்பு மற்றும் பாதாளசாக்கடை குளறுபடிகளையும் சரி செய்திடாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நாஞ்சிகோட்டை சாலையில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி கே நீலமேகம் பொதுமக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.

ம.சசிக்குமார் நிருபர்,
தஞ்சை