தஞ்சாவூர் அக்: 17-தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கீழ மேடு கோட்டை குளத்தை சேர்ந்த இளங்கோவன் (49)இவர் சாமியார் மடம் பகுதியில் தேனீர் கடை வைத்துள்ளார் சம்பவத்தன்று இளங்கோவனின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசியவர் நாங்கள் பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து பேசுகிறோம் உங்கள் பழைய ஏடிஎம் கார்டை புதுபித்து பழைய ஏடிஎம் கார்டு தகவல்களை தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் இளங்கோ தான் தன்னிடம் ஏடிஎம் இல்லை தனது தந்தையிடம் ஏடிஎம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு தொலைபேசியில் பேசிய நபர் இளங்கோவனின் தந்தை ஏடிஎம் கார்டை புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்லி இருக்கிறார் அதன்படி இளங்கோவும் தனது தந்தை துறை மாணிக்கத்தின் பட்டுக்கோட்டை இந்தியன் வங்கி ஏடிஎம் கார்டு தகவல்களை தெரிவித்து புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார் தொடர்ந்து, ஒடிபி தகவலையும் அந்த மர்ம நபர் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இளங்கோவின் தந்தை துறைமுகத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 1, 24 லட்சம் எடுக்கப்பட்டுவிட்டது இதனால் அதிர்ச்சி அடைந்த இளங்கோ இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் இதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/