தஞ்சை, பிப்.12- மாணவர்களிடையே மதமோதலை உருவாக்கி, அதில் அரசியல் ஆதாயம் தேடும் கர்நாடக பாஜக அரசை கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் கொட்டும் மழையிலும் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

மாவட்டத் தலைவர் வே.அர்ஜூன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் அரவிந்தசாமி பேசினார். இதில் சிறுபான்மை சமூகப் பெண்கள் ஹிஜாப் உடை அணிவதை வைத்து, கீழ்த்தரமான மதவாத அரசியல் செய்யும், பாஜக உள்ளிட்ட இந்து மதவாத அமைப்புகளைக் கண்டிப்பது, பெண்களை அச்சுறுத்தி, அவர்கள் கல்வி கற்பதை தடுக்கும் பாசிச சக்திகளை முறியடிப்போம் என போராட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/