தஞ்சை ஜன 28 கடந்த 6 ஆண்டுகளாக தினமும் டீசல் மற்றும்‍ பெட்ரோல் விலை எந்த ஒரு கட்டுபாடுமில்லாமல் உயர்ந்து கொண்டே இருப்பதால் மீன்பிடி தொழில் தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் மல்லிப்பட்டினம் கள்ளி வயல் தோட்டம் சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் 146 விசைப்படகுகள் உள்ளன, டீசலில் இயங்கும் விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீனவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் திங்கள் புதன் சனி ஆகிய நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர், ஆனால் தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்வதால், இவர்களின் செலவிற்கும் மீன்களை சந்தையில் விற்பதற்கும் கட்டுப்படி ஆகாமல் மீன்பிடித்தொழில் நஷ்டத்தில் இயங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர், மீன்கள் விலையும் குறைந்து கொண்டே வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர், அரசு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கிடுகிடு என தினமும் உயர்த்தும் டீசல் விலைக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை