தஞ்சை பிப் :29, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் இருக்கும் நிலையில்  கடந்த 26ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன, இதையொட்டி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் வகையில் செக்போஸ்ட் அமைத்து வாகன சோதனை நடந்து வருகிறது.

அதன்படி தஞ்சை மாவட்ட எல்லைகளான புதுக்குடி, அற்புதபுரம், விளாங்குடி, அணைக்கரை, நீலத்தநல்லூர், உள்ளிட்ட 9 இடங்களில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது அங்கு பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினர் மற்றும் போலீசார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனை தீவிரமாக ஈடுபட்டு நடைபெற்று வருகிறது அதேபோன்று தஞ்சையில் பல்வேறு முக்கிய இடங்களிலும் வாகன சோதனை நடந்து வருகிறது, தஞ்சை பள்ளி அக்ரஹாரம், கோடி அம்மன் கோவில், மேலும் தஞ்சையில் முக்கிய இடங்களிலும் வாகன சோதனை நடைபெற்வருகிறது.

இதில் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது, பணம் பரிசுப் பொருள்கள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது, அளவுக்கு அதிகமான பரிசு பொருள்கள், பணம், இருந்தால் அதற்குரிய ஆவணங்களை சரி பார்த்த பிறகே வாகனத்தை அனுப்பி வைத்தனர், இந்த பணி நடந்து வருகிறது இதேபோல மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு வாகன சோதனைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை