தஞ்சை. பிப்.5,  தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பேரவை கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது நிர்வாக குழு தலைவர் காந்தி தலைமையில் துணைத் தலைவர் பாலாஜி மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் அன்பழகன் லீலா சத்தியா சக்திவேல் ராஜேஸ்வரி சுப்பிரமணியம் ரவிச்சந்திரன் மாலா ஆகியோர் முன்னிலையில் பொதுப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செயல் இயக்குனர்கள் இளங்கோவன் தஞ்சை சந்திரசேகர் திருவாரூர் விஜயகுமார் விநாயகம் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தது.

புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை ஒன்றியத்தின் உறுப்பினராக சேர்த்தல் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள பணியாளர் திறன் பட்டியலுக்கு ஒப்புதல் பெறுதல் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இக் கூட்ட்த்தில் தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர்கள் துணை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை