தஞ்சாவூர்செப் 28 தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டினம் பாரம்பரிய மீனவர் சங்க கட்டிட வளாகத்தில் மாநில பொது செயலாளர்
தாஜ்தீன் தலைமையில் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் செயலாளர் வடுகநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் விசைப்படகு நாட்டுப்படகு இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி நாட்டுப் படகுகள் தொழில் புரிவதால் விசைப்படகுகள் உரிய நாட்களில் தொழில் செய்ய செல்லும்போது நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளில் சிக்கி விசைப்படகுகள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி நஷ்டம் ஏற்படுகிறது இதனால் விசைப்படகுகள் தொழில் செய்ய முடியாமலும் உள்ளது.
இதனால் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்துள்ளனர் ஏற்கனவே ஆழ்கடல் படகுகளை அந்தந்த துறைமுகத்தில் நஷ்டம் ஏற்பட்டு தொழிலுக்குச் செல்லாமல் நெரித்து வைத்துள்ளனர் இதனால் மீனவர்கள் வங்கிக் கடன் கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எங்களுக்கும் ஏற்படும் என்பதால் எங்களுக்கு மாற்று தொழில் செய்ய எங்கள் அருகாமையில் உள்ள நாகை மாவட்டம் போல் இரண்டு நாள் முதல் ஐந்து நாட்கள் வரை ஆழ்கடல் சென்று தங்கி மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் டீசல் உற்பத்தி விலைக்கு மீனவர்களுக்கு வழங்க வேண்டும் இந்த கோரிக்கைகளை அரசு செய்து கொடுத்தால்தான் நாட்டுப்படகு விசைப்படகு இடையே பிரச்சனை இன்றி தொழில் புரியவும் விசைப்படகு நஷ்டம் இன்றி தொழில் புரியவும் வழிவகுக்கும்.
இவற்றை அரசு செய்து தர வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் அனைத்து ஊர் சங்க தலைவர்கள் செல்லக்கிளி ஷர்புதீன் ஹபீப் முகம்மது இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதன்படி நேற்று முதல் மல்லிப்பட்டினம் பள்ளிவாசல் தோற்றம் சேதுபாவாசத்திரம் பகுதிகளில் இருந்து சுமார் 150 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,’
செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/