தஞ்சாவூர் அக், 2: தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 13 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது,மூன்றாவது அலை குறித்து அச்சம் உள்ளதால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசி களுக்கு ஏற்ப மையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது இதுதவிர வீதிவீதியாக முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது மேலும் வாரம் தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது தஞ்சை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் மூன்று கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது.

முதலாவது தடுப்பூசி முகாமில் ஒரு லட்சத்து ஐயாயிரத்து 530 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 902 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது இதற்காக 2 136 முகாம்கள் அமைக்கப்பட்டு எட்டாயிரத்து 144 பணியாளர்கள் பணிபுரிந்தனர் இரண்டாவது தடுப்பூசி முகாமில் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு 47 ஆயிரத்து 544 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதற்காக 709 முகாம்கள் நடத்தப்பட்டு 2036 பணியாளர்கள் ஈடுபட்டனர் மூன்றாவது தடுப்பூசி முகாமில் 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 11 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறும்போது தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கத்தில் தடுப்பூசி போடும் பணிகளை விரிவுபடுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த மாபெரும் சிறப்பு முகாம் நடத்த முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக மாபெரும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு உள்ளது தஞ்சை மாவட்டத்தில் 21 ஊராட்சிகளில் 100% தடுப்பூசி போடப்பட்டுள்ளது இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 13 லட்சத்து 47 ஆயிரத்து 65 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/