தஞ்சாவூர் சூலை 21- தஞ்சை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு. 2021 ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகியவற்றில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக 28ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் மேலும் மாணவர்களுக்குப் உதவிடும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றின் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பத்தினை இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளும்போது பள்ளி அசல் சான்றிதழ் அனைத்தும் உடன் எடுத்து வர வேண்டும் விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 50 செலுத்தவேண்டும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.

இணையதள கலந்தாய்வு தர வரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்து விவரங்கள் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் அலுவலகம், 04362 -278222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/