தஞ்சை, அக். 16-தஞ்சாவூர் மாவட்ட அரசு ஐடிஐ-ல் மாணவ, மாணவிகள் நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 2021-ம் ஆண்டில் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள காலியிடங்களுக்கு மாணவ, மாணவிகள் நேரடிச் சேர்க்கை வரும் 30ம் தேதி வரை செய்யப்படுகிறது. மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், சேர்க்கைஉதவிமையம்; அமைக்கப்பட்டுள்ளன.

இம்மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்து தரப்படுகிறது. தஞ்சாவூர் அரசு ஐடிஐ-யில் பெண்களுக்கு என தனிபிரிவுகளான டெக்னீசியன் மெக்கட்ரானிக்ஸ், கணினி இயக்குபவர் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளன. பொதுபிரிவுகளில் இன்டீரியர் டிசைன் மற்றும் டெக்கரேசன், இன்டஸ்ட்டிரியல் பெயிண்டர், இன்ஸ்பெக்ஷன் வெல்டிங், உலோகத்தகடு வேலையாள் போன்ற பிரிவுகளில் காலி இடங்கள் உள்ளன.

எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிசான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ ஆகியவற்றுடன் ஐடிஐ சென்று நேரடிச்சேர்க்கை செய்துக் கொள்ளலாம். ஆண் விண்ணப்பதாரர்கள் 14 வயதுக்குமேலும் 40 வயதுக்குமிகாமலும் இருக்கவேண்டும்.

பெண்களுக்கான குறைந்தபட்ச வயது 14. உச்ச வயதுவரம்பு இல்லை.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பிரிவுகளில் சேர்வதற்கு 2021-க்கு முன்புதேர்ச்சிபெற்றவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், 2021-ல் தேர்ச்சிப் பெற்றவர்கள் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

12-ஆம் வகுப்புதேர்ச்சி, தோல்வி, பட்டப்படிப்பு இடையில் நின்றவர்களும் விண்ணபிக்கலாம். விண்ணப்பிக்க கட்டணம் ரூ.50-ஐ ஏ.டி.எம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் வாயிலாக செலுத்த வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி,சீருடை,காலணி, பாடப்புத்தகங்கள் வரைபடக் கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்குவதுடன் மாதந்தோறும் ரூ. 750 உதவித் தொகையும் வழங்கப்படும்.

பயிற்சியை முடித்தவர்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி, தொழிற் பழகுநர் பயிற்சி, உடனடி வேலைவாய்ப்புகள் பெற்றுத்தரப்படும். இந்த அரிய வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறுமாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர், முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், தஞ்சாவூர் அணுகலாம். செல்போன் எண் : 9994043023, 9840950504, 8825565607, 8056451988, 7845529415. ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/