தஞ்சாவூர் செப் 12 தஞ்சை மாவட்டத்தில் 1326 இடங்களில் இன்று நடைபெற உள்ள மாபெரும் கொரோனா நோய் தடுப்பூசி முகாம் 1.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவிக்கிறார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் திருப்பனந்தாள் கும்பகோணம் பாபநாசம் மற்றும் தஞ்சை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மாபெரும் குரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

இதையடுத்து உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தஞ்சை மாவட்டத்தில் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மாபெரும் கொரோனா நோய் தடுப்பூசி முகாம் குறித்து உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த முகாமில் சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்தில் ஆல்பம் நடத்தப்பட்ட இதுவரை மாவட்டத்தில் 99 81 87 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் குழப்பம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை 1324 இடங்களில் நடைபெற்றது 1 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம்களில் ஊரக மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகள் பள்ளிகள் துணை சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.

ஒரு முகாமிற்கு 4 பணியாளர்களிடம் மேற்பார்வையாளர்கள் உட்பட 77 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே பொது மக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் உடனடியாக அருகில் உள்ள கிராமம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/