தஞ்சை பிப். 10,தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரங்கில் நடைபெற்றது குரோனா ஊரடங்கு காரணமாக கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்று இந்த நிலையில் ஒரு மாதங்களுக்குப் பிறகு நேரடியாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆட்சியர் கோவிந்த ராவ் தலைமை தாங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் சிற்றரசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் டெல்லி போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து புதிய வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யக் கோரி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பியவாறு கூட்டத்திலிருந்து சிறிதுநேரம் வெளிநடப்பு செய்தனர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளும் கருப்பு துண்டு மற்றும் பச்சை துண்டு அணிந்த கொடி வெளிநடப்பு செய்தன கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே கோஷங்களை எழுப்பினர் பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்திரன் எழுந்து வயிற்றை கட்டி வாயை கட்டி விவசாயிகள் பிழைப்பு நடத்தி நிதி நெருக்கடியில் விவசாயிகள் தவிர்த்து வந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடன் ரூபாய் 2110 கொடியை முழுமையாக தள்ளுபடி செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் ஏக்கருக்கு ரூபாய் 20000 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிவாரணம் வழங்கி வந்த நிலையில் பயிர்சாகுபடி கணக்கெடுப்பை முழுவீச்சில் தன்னை ஈடுபடுத்தி வருவது ஒரு விவசாயி கூட விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட தஞ்சை கலெக்டர் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறி கூட்டத்திலிருந்த கலெக்டர் கோவிந்தராஜ் மற்றும் அதிகாரிகள் விவசாயிகள் அனைவரும் இனிப்பு வழங்கினர்.

கூட்டத்தில் கலெக்டர் கோவிந்தராஜ் பேசுகையில் தஞ்சை மாவட்டத்தில் சம்பா தாளடி பருவத்தில் இதுவரை 42 ஆயிரத்து 356 தேரில் அறுவடை முடிவடைந்துள்ளது 637 தேரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது வேளாண் பொறியியல் துறை சார்பில் முன் தந்திரம் உழவு இயந்திரம் அறுவடை இயந்திரம் போன்ற கருவிகளை வாடகைக்கு விடப்பட்டு வருகிறது கூட்டுறவுத் துறை சார்பில் பயிர்களாக ரூபாய் 344 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 325 உள்ளே 91 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நடப்பாண்டில் 9 தாலுகாக்களில் 437 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது இதுவரை 2 லட்சத்து 51 ஆயிரத்து 750 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரைஆலை அரவை பருவம் நடைபெற்று வருகிறது என்றார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.