தஞ்சாவூர் அக்.23. தஞ்சாவூர் மாவட்டம் விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது மாநில பொதுச் செயலாளர் சிராஜுதின் தலைமையில் தஞ்சை மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம் செயலாளர் வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டின மீனவர்களையும் இலங்கைப் படை தொழில் செய்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் மோதி அடித்து கொலை செய்யப்பட்டு படகையும் மூழ்கடித்த கொடூரமான சம்பவம் நடந்தது இந்த செயலில் ஒன்றிய அரசு கண்டிக்காமல் இலங்கை அரசுடன் நட்பு பாராட்டி உறவுடன் இருப்பது ஒன்றிய அரசு மீனவர் விரோத போக்கை கையாண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இந்திய மீனவர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இலங்கை அரசோடு ஒன்றிய அரசு ஒன்றிணைந்து செயல்படுவது கண்டிக்கத்தக்கது படுகொலை செய்யப்பட்ட மீனவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

ஒன்றிய அரசின் தற்போதைய நடவடிக்கைகளைப் மீன்பிடித் தொழிலை விட்டு அப்புறப்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு கடற்பரப்பை தாரைவார்க்கும் செயலாகத் தெரிகிறது மீனவர்களுக்கு டீசல் உற்பத்தி விலைக்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 29ஆம் தேதி மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறும் சாலை மறியல் போராட்டத்தை அதிக அளவில் மீனவர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் ஏராளமான மீனவர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/