தஞ்சை ஏப்ரல் 1 தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய எட்டு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள தொகுதிகளில் மொத்தம் 89 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் நீலமேகம் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி.

ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம், திமுக வேட்பாளர் எம் ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அதிமுக வேட்பாளர் ரங்கராஜன் பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் அசோக்குமார் அதிமுக வேட்பாளர் திருஞானசம்பந்தம் திருவையாறு தொகுதியில் திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரன், பாஜக வேட்பாளர் வெங்கடேசன் பாபநாசம் பகுதியில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா அதிமுக வேட்பாளர் கோபிநாதன் கும்பகோணம் தொகுதியில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் திருவிடைமருதூர் தொகுதி திமுக வேட்பாளர் கோவி செழியன் அதிமுக வேட்பாளர் யூனியன் வீரமணி ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் தொகுதியில் வாக்கு சேகரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் பெரும்பாலான இடங்களில் பிரச்சாரத்தை முடித்து விட்டனர் மீதமுள்ள விடுபட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வாக்கு கேட்டு வருகின்றனர் பலர் முக்கிய பகுதிகளில் முக்கியஸ்தர்களுக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு வாக்கு கேட்டு பேசி வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரம் வரும் நாலாம் தேதி மாலை 7 மணிக்கு முடிவடைகிறது ஜட்டி இன்னும் நான் நாட்களே உள்ளன இதனால் இலங்கை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மிகத் தீவிரமாக இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முடிய சில நாட்களே இருப்பதால் அனைத்து வேட்பாளர்களும் பம்பரமாக சுற்றி சுழன்று வாக்கு கேட்டு வருகின்றனர் காலை 11 மணிக்கு மேல் கடும் வெயிலிலும் கொளுத்தினாலும் வேறு வழியின்றி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் மதியம் சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் மீண்டும் மாலையில் தீவிரமாக ஓட்டு கேட்டு வருகின்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.