தஞ்சாவூர் சூலை 24- தஞ்சை மாநகராட்சியில் சாலை விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என தஞ்சை மாநகராட்சி ஆணையர் உறுதியளித்தார்.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக எஸ்பி, உத்தரவின்பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் கூறியதாவது தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, சாலை ஓரங்களில் உள்ள மண் திட்டுக்களும் அப்புறப்படுத்த உள்ளோம்.

சாலை ஓரங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தம் தொடர்பாக கோடு வரைவது மாநகரில் சாலை விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பது தஞ்சை மாநகரில் உள்ள 51 வார்டுகளிலும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் உடனடியாக சீர் செய்வது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இதன் ஒருபகுதியாக தஞ்சை மாநகரில் பெயர்ப்பலகை வைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது.

டெண்டர் விடப்பட்டு ஒரு ஆண்டுகளாக பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படாததால் அதற்கான ஒப்பந்தத்தை ஆணையர் சரவணகுமார் ரத்து செய்து உத்தரவிட்ட இதேபோல் கரந்தை கருணாசாமி கோயில் குளம் சீரமைப்பது தொடர்பாக விடப்பட்ட ஒப்பந்ததாரர் பணிகளை குறித்த காலத்தில் முடிக்காததால் இது குறித்து அவருக்கு அறிவுறுத்தியும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் தஞ்சை மாநகராட்சி பணிகளை எடுக்கும்போது அவர்கள் அந்த பணிகளை முடிக்காமல் இன்னொரு பணிக்கு ஒப்பந்தம் கோரினால் அது வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/